Skip to main content

Posts

Showing posts from August, 2020

முதலாளித்துவ நெருக்கடிகளின் உலகமயமாக்கல்

பவானிசங்கர் நாயக்                              தமிழில் : நிழல்வண்ணன்   பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சி நிச்சயமற்றதாகத் தெரிகிறது , முதலாளித்துவத்தின் கற்பனை எல்லைக்குள் கொள்கை வகுப்பின் ஒவ்வொரு பிரிவிலும் பொருளாதாரக் கருத்துருக்கள் மங்கலாகவே தெரிகின்றன . வெஸ்ட்பாலியன் சர்வதேச அமைப்பு முறைக்குள் பலமாக நிலவும் பலதரப்பு ஒத்துழைப்பு என்பது சிதறுண்டு , ஐரோப்பிய மைய பக்கச்சார்பு , ஜனநாயகக் குறைபாடு , முன்னாள் காலனிய வல்லரசுகளின் நிறுவன மேலாதிக்கம் ஆகியவற்றுக்குள் புதைந்துவிட்டதன் காரணமாக அதன் இருத்தலுக்கே அச்சுறுத்தலை எதிர்கொண்டுவருகிறது . உலகம் முதலாளித்துவத்திற்குள்ளேயே ஏற்படும் நீண்டகால நெருக்கடிக்குள் சென்றுகொண்டிருக்கிறது . முதலாளித்துவ அமைப்பு இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு பயன்தரக்கூடிய எந்த ஒரு மாற்றினையும் வழங்கத் தவறியுள்ளது .   அதற்கு மாறாக , மக்களிடையே நெருக்கடிகளின் உலகமயமாக்கலையும் துயரங்களையும் அதிகரிக்கவே செய்துகொண்டிருக்கிறது . பட்டினி , வீடின்மை , வேலையின்மை ஆகிய இடர்ப்பாடுகள் அதிகரித்துக் கொ