சர்வதேச அளவிலான முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி கோடிக்கணக்கான தொழிலாளர்களை வேலையற்றவர்களாக்கி வீதியில் தள்ளியுள்ளது . வளர்ந்த நாடுகள் , வளரும் நாடுகள் , பின் தங்கிய நாடுகள் என அனைத்தும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வருகின்றன . கொரானா நோய்ப் பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலானது முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களைத் திசை திருப்ப வசதியான காரணமாக அமைந்துள்ளது. அரசின் கஜானாவைக் கபளீகரம் செய்தல் , இயற்கை வளங்களைச் சூறையாடல் , தங்களுக்குச் சாதகமாகச் சட்டங்களைத் திருத்தம் செய்து கொள்ளல் , அடித்தட்டு மக்களின் மீது மேலும் மேலும் நெருக்கடிகளை திணித்தல் என இந்த அசாதாரண சூழலை இந்த நாட்டின் ஆளும் முதலாளி வர்க்கம் பயன்படுத்தி வருகிறது . மேலும் , இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக உள்நாட்டுத் தயாரிப்புகள் , உள்ளூர் மக்களுக்கு வேலை எனத் தேசியவாத முழக்கங்களை முன்வைத்து மக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகிறது . பின்னலமைப்பு முறையிலான தயாரிப்பு (Network Produts) உற்பத்தியானது தேசியத் தன
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்