Skip to main content

Posts

Showing posts from January, 2023

ஹோ சி மின் - நான் எவ்வாறு கம்யூனிஸ்டு ஆனேன்

  முதல் உலகப் போருக்குப் பிறகு , நான் பாரிசில் வசிக்கத் தொடங்கினேன் , ஒருபோது புகைப்படக் கலைஞரிடம் புகைப் படங்களைச் சீர்ப்படுத்துபவனாக , ஒருபோது “ சீனப் பழம்பொருட்கள் ” ( ஃபிரான்சில் தயாரிக்கப்பட்டவை !) வண்ணம் பூசுபவனாக வேலை செய்தேன் . வியட்நாமில் பிரெஞ்சுக் காலனியவாதிகள் புரிந்த குற்றச் செயல்களைக் கண்டிக்கும் பிரசுரங்களை விநியோகித்தேன் . அந்த நேரத்தில் , உள்ளுணர்வால் மட்டுமே நான் அக்டோபர் புரட்சியை ஆதரித்தேன் , அதன் வரலாற்று முக்கியத்துவம் அனைத்தையும் நான் இன்னும் உள்வாங்கிக் கொண்டிருக்கவில்லை . நான் லெனினை நேசித்தேன் , போற்றினேன் , ஏனென்றால் அவர் தனது நாட்டு மக்களை விடுவித்த மாபெரும் நாட்டுப் பற்றாளராக இருந்தார் , அதுவரை நான் அவரது புத்தகங்கள் எதையும் வாசித்திருக்கவில்லை . பிரெஞ்சு சோசலிசக் கட்சியில் நான் சேர்ந்ததற்குக் காரணம் அந்த தருணத்தில் “ சீமாட்டிகளும் கனவான்களும் ” என்று நான் விளித்த அந்தத் தோழர்கள் என்னிடமும் ஒடுக்கப்பட்ட மக்களினங்களின் போராட்டங்களின் பாலும் அனுதாபம் காட்டினர் . ஆனால் அப்போது ஒரு கட

மக்களுக்குத் தேவையானது சோசலிச மாடல்தான்

  தமிழ் நாட்டின் ஆளுநர் ரவி இன்று தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளார். அவர் ஆளுநர் பொறுப்பில் உள்ளார் என்பதை மறந்து விட்டு ஓர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரராகச் செயல்பட்டு வருகிறார். தமிழ் நாடு   என்ற பெயருக்குப் பதிலாக தமிழகம் என்ற பெயர்தான் இருக்க வேண்டும் என்கிறார். Union Government என்பதற்கு ஒன்றிய அரசாங்கம்   என்று சொல்லக் கூடாது என்கிறார். ‘தமிழ் நாடு’ ‘ஒன்றிய அரசாங்கம்’ என்று குறிப்பிட்டால் அது பிரிவினைவாதத்திற்கு கொண்டு செல்லும் எனக் கூறி அந்த வார்த்தைகளைப்   பயன்படுத்தக் கூடாது என்கிறார். இவ்வாறு பேசுவதன் மூலம் தமிழின மக்களின் தேசிய உணர்வைக் கொச்சைப்படுத்தவும் காயப்படுத்தவும் செய்கிறார். தான் செல்லும் இடங்களில் எல்லாம் சனாதனப் புகழ் பாடி வருகிறார். இந்துத்துவவாதிகளின் ஏஜண்டாகச் செயல்பட்டு வருகிறார். மதச் சார்பற்ற அரசின் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர் இவ்வாறு பேசுவது இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்பதை அறிந்தும் தொடர்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டு வருகிறார். ஆளுநர் என்பவர் அந்த மாநிலத்தில் உள்ள அரசின் தலைவர் என்பதையும்,

நான் ஒரு போதும் திரும்பமாட்டேன்!

விழித்தெழுந்திட்ட பெண் நான் எரிக்கப்பட்ட எனது குழந்தைகளின் சாம்பலினூடாக உதித்தெழுந்து புயலானவள் நான் பீரிட்ட எனது சகோதரனின் குருதியோடையிலிருந்து உதித்தெழுந்து புயலானவள் நான் . எனது தேசத்தின் சீற்றமே எனக்கு ஆற்றலை அளித்தது அழிக்கப்பட்ட , எரிக்கப்பட்ட எனது கிராமங்கள் எதிரிக்கு எதிரான வெறுப்பை எனக்குள் நிரப்பின ஓ , எம் நாட்டு மக்களே ! நான் பலவீனமானவள் , திறனற்றவள் என்று இனியும் கருதாதீர் விழித்தெழுந்திட்ட ஆயிரக்கணக்கான பெண்களுடன் எனது குரல் கலந்துவிட்டது எனது கரங்கள் ஆயிரக்கணக்கான போராளிகளின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டுள்ளன . இந்தத் துயரங்கள் அனைத்தையும் துடைத்தெறிய அடிமை விலங்குகள் அனைத்தையும் உடைத்தெறிய விழித்தெழுந்துவிட்ட பெண் நான் எனது பாதையை நான் கண்டுகொண்டேன் ஒருபோதும் திரும்பமாட்டேன் . ஆப்கானிஸ்தானத்தின் மகத்தான கவிதாயினி மீனா பெண்விடுதலைக்காகப் போராடி உயிரீந்தவர் . 1977 இல் ஆப்கானிஸ்தான் புரட்சிகரப் பெண்கள் சங்கத்தைத் தோற்றுவித்தவர் . இசுலாமிய தீவிரவாதிகளுக்கும் இரசிய ஆக்கிரமிப