பால் டிஅமேட்டோ தமிழில்: நிழல்வண்ணன் தற்போதைய அரசாங்கத்தின் கட்டமைப்புக்கள் முதலாளித்துவத்தின் கீழ் வளர்ந்துள்ளவை; அவை முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கபட்டவையாகும். “நவீன அரசின் நிர்வாகத் தலைமை என்பது ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுவான விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவாகும்” என்று கம்யூனிஸ்டு அறிக்கையில் கார்ல் மார்க்சும் பிரடெரிக் எங்கல்சும் எழுதுகின்றனர். நவீன அரசு என்பது மேலாதிக்க வர்க்கத்தின் – பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் – அரசாகும். உண்மையில் அரசு என்பது அதன் தோற்றத்திலிருந்தே மேலாதிக்க வர்க்கத்தின் அரசாகவே இருந்து வந்துள்ளது, மேலும் அதன் முதன்மையான நோக்கம் அந்தக் குறிப்பிட்ட வர்க்கத்தின் ஆட்சியைக் காப்பாற்றுவதே ஆகும் என்று எங்கல்ஸ் வாதிடுகிறார். அரசு என்பது வர்க்கப் பகைமைகளைத் தடுத்துநிறுத்தி வைக்கும் தேவையிலிருந்து தோன்றியது மட்டுமின்றி, வர்க்கங்களிடையே நடந்த மோதலிலேயே தோன்றியதால், அது இயல்பாகவே பொருளாதார ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த ஆளும் வர்க்கத்தின் அரசாகவே இருக்கிறது, அது அதன் சாதனங்கள் மூலம் அரசியல்ரீதியாகவும
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்