14.02.2023 அன்று ‘வடவர் வருகையும் தமிழ்நாடும்’ என்னும் தலைப்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தோழர் தியாகு உரையாற்றியிருந்தார். உரையின் தொடக்கத்தில் தொழிலாளர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு அந்நிய மண்ணிற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்படுகிறது என்பதைப் பற்றி விவரித்த தியாகு பின்னர் அதற்கான தீர்வாக அவர்களுடைய வருகையைத் தடுக்க வேண்டும் என்பதை முன்வைக்கிறார். வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்குக் கடவுச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இதன் மூலம் அவர்கள் தமிழ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும் என்கிறார். அப்படியானால், நாடுகளுக்கிடையே கடவுச் சீட்டு முறை இருப்பதால் தொழிலாளர்கள் புலம் பெயராமல் இருக்கின்றார்களா? அல்லது தடுக்கப்படுகின்றனரா? ஒவ்வொரு நாடும், அந்த நாட்டின் முதலாளி வர்க்கத்தினருக்குத் தேவையான உழைப்புச் சக்தி மிகக் குறைந்த கூலியில் எவ்வளவு தேவைப்படுகிறதோ அந்தளவிற்கு அவை தொழிலாளர்களைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றன. உள்நாட்டு முதலாளிகள் தங்கள் நாட்டுத் தொழிலாளர்களுக்கு முதலில் வேலை வாய்ப்பை வழங்கி விட்டுப் பின்னர் எஞ்சியவற்றை அயல் நாட்டுத் தொழிலாள
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்