இந்திய அரசினால் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நான்கு புதிய சட்டத்தொகுப்புகளாக மாற்றப்பட்டன . இந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிராகத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தங்கள் எதிர்ப்புகளைப் பலவகைகளில் தெரிவித்து வந்தாலும் இந்திய அரசோ புதிய தொழிலாளர் விரோதச் சட்டங்களை நிறைவேற்றியதோடு அதனை நடைமுறைப்படுத்தும் வேலையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது . அந்த வகையில் மாநில அரசுகள் இந்தச் சட்டங்களையொட்டி மாநில அளவில் அதற்கான விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது . மத்திய அரசின் உத்தரவையொட்டி அனைத்து மாநில அரசுகளும் அதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கின்றன . தமிழ்நாட்டிலும் , மாநில அரசானது மூன்று சட்டத் தொகுப்புகளுக்கான ( ஊதிய சட்டத் தொகுப்பு , பணியிடப் பாதுகாப்பு ஆரோக்கியம் மற்றும் பணிநிலைமைகள் குறித்த சட்டத்தொகுப்பு , தொழில் உறவுகள் சட்டத்தொகுப்பு ) விதிமுறைகளை ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியிட்டிருக்கின்றது . இதன் மீதான கருத்துகள் , ஆலோசனைகள் , ஆட்சேபனைகளை 45
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்