கடந்த காலத்தின் கலாச்சாரத்தை முதன்மைப்படுத்தும் இந்துத்துவ அடிப்படைவாத , பழமைவாத பி . ஜே . பி - நவீன கார்ப்பரேட்களோடு எப்படி ஒத்துப்போக முடிகிறது ? மக்களிடம் மதவாதக் கட்சியாக இருந்தாலும் ஆளும்வர்க்கத்திற்காக இயங்குவதில் மற்றெல்லா முதலாளித்துவக் கட்சிகளையும் பின்னுக்குத்தள்ளி தலைமைப் பாத்திரம் வகிப்பதால் தான் ஆளும் வர்க்கம் அதை ஆளும் கட்சியாக்கி அரசை அதனிடம் ஒப்படைத்திருக்கிறது . மதத்தைப் பிரச்சாரத்தோடு வைத்துக்கொண்டு முதலாளித்துவத்திற்கும் , கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கும் சேவையில் முதன்மையாகப் பணியாற்றுவதுதான் அவர்களின் தீர்க்கமான நடைமுறை . எங்காவது இதன் வழியில் மதம் குறுக்கிட்டால் அதைக் கைவிட்டு , கடந்தும் போகக்கூடியதாகவும் இருக்கிறது அவர்களின் எல்லை கடந்த கார்ப்பரேட் விசுவாசம் . இந்த இரட்டை வேடம் பா . ஜ . க . வுக்கு அளிக்கும் பலனைவிட பெருநிறுவனங்களுக்கு முழுமையான பலனைத் தருகிறது . அதனால்தான் அது ஆள அனுமதிக்கப்பட்டிருக்கிறது . முதலாளித்துவம் மக்களுக்கு எதிராக நிற்பதை மறைத்துக்கொண்டு இந்துத்துவாவை , மதத்தை முன
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்