வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ ஒன்று தொழிலாளர்களிடையே பரப்பப்பட்டு அச்சத்தையும் இன வெறுப்பையும் பரப்பும் வேலையில் சமூக விரோதிகளும், சங்பரிவார் அமைப்பினரும் ஈடுபட்டு வந்தனர். இந்த வதந்தி வேகமாகப் பரவியதையடுத்து வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல அஞ்சி முடங்கினர். இதே நேரத்தில் ஹோலி பண்டிகையும் வந்ததால் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லத் துவங்கினர். திடீரென கூலியுழைப்புச் சந்தையில் ஏற்பட்ட இந்த நெருக்கடியானது, தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர முதலாளிகளையும், வணிகர்களையும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கியது. திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணியாற்ற சங்கம் முழு ஆதரவு தருவதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றியது. (07 மார்ச் 2023 - தினத்தந்தி ) வடமாநிலத் தொழிலாளர்கள், நம் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்