Skip to main content

Posts

Showing posts from September, 2023

செயற்கை நுண்ணறிவும் சோசலிசத்தை நோக்கிய நகர்வும்

  செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பொருள் உற்பத்தியிலும் ஒட்டுமொத்த சமூக வாழ்க்கையிலும் உலகம் முழுவதும் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றது. வேளாண்மை, தொழிற்துறை, போக்குவரத்து, கல்வி, மருத்துவம், நிர்வாகம், விற்பனை, சந்தைப்படுத்தல் என அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் கணினிகள், இயந்திரங்கள், ரோபோட்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் அதிகரித்துவருகின்றன. விவசாயத்தில் நிலத்தை உழுதல், சமன்படுத்தல், விதைத்தல், அறுவடை செய்தல், பருத்தி எடுத்தல், திரவ வடிவிலான உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை ட்ரோன்கள் (drone) மூலம் தெளித்தல் போன்ற பல்வேறு வேலைகளும் இன்று செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ரோபோட்கள் மூலமும், இயந்திரங்கள மூலமும் செய்யப்படுகின்றன. அதே போல தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும் ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கார் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உதிரிப் பாகங்களை இணைத்தல், பற்ற வைத்தல், வண்ணம் பூசுதல் போன்ற பல்வேறு பணிகளுக்கும் ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கார் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மட்டும் இப்பொழுது பத்து இலட்சம் ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்