ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்ட சபைக்கான தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என இரண்டு கூட்டணிகளும், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணியும், தினகரனின் அ.ம.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் களம் இறங்கியுள்ளன. பல கூட்டணிகள் இருந்தாலும் தி.மு.க. கூட்டணிக்கும் பத்தாண்டுகளாக ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையிலான மோதலே இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கற்பனைகளும் விருப்பங்களும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க. இருபது இடங்களில் போட்டியிடுகிறது. மத வெறி பிடித்த பாசிசக் கட்சியான பா.ஜ.க.வை இங்கு கால் ஊன்ற விடக் கூடாது என்று கூறி பல சிறு அமைப்புகள் மக்கள் இயக்கங்கள் என்ற பெயரில் ஒன்று சேர்ந்து அக்கட்சி போட்டியிடும் இடங்களில் அதற்குக் கட்டுத் தொகை கூடக் கிடைக்கவிடாமல் தோற்கடிக்க வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. பல சீர்திருத்தவாதக் கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை ஏற்றுக் கொள்ள தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளை மக்கள் வலியுறுத்த வே
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்