Skip to main content

Posts

Showing posts from October, 2025

நோபல் அமைதிப் பரிசு -வெனிசுவேலாவின் மீதான போருக்கு!

  நோபல் பரிசுக் குழு உலக அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அரசாங்கத்தின் நிதி ஆதரவுடன் வெனிசுலாவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான திட்டங்களில், செயல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மரியா கொரினா மகடோவுக்கு வழங்கி உள்ளது. அதன் மூலம் அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலாவின் மீது போர் தொடுப்பதற்காக வழி செய்து உள்ளது. மரியா கொரினா வெனிசுலா அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான ஏராளமான சதிகளில் ஈடுபட்டார்; ஆனால் அவை தோல்வியில் முடிந்தன ; வெனிசுலாவின் தெருக்களில் பல வன்முறையான கலவரங்களைத் தூண்டி ஏராளமானவர்களின் மரணத்துக்கு வழி வகுத்தார் ; வன்மம் நிறைந்த தனது அரசியல் வெற்றிக்கு நிதி பெறுவதற்காக தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களை ட்ரம்பின் "மீண்டும் அமெரிக்காவை சிறப்பானதாக்குவோம்" என்ற அடிப்படையில் ஒன்றிணைந்துள்ள மகா கோடீஸ்வரர்களுக்கு வழங்கத் திட்டமிட்டு செயல் புரிந்து வருகிறார்.   " அமைதியான முறையில் தனது நாட்டில் மாற்றத்தை கொண்டுவர முயன்றார்" என்று நோபல் பரிசுக் குழு அவரைப் பாராட்டியது. ஆனால் மரியா கொரினா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வெனிசுலாவின் மேல் ராணுவ நட...

பாலஸ்தீனத்தையும் அதன் மக்களையும் சிதறடிக்கும் அமைதித் திட்டம்!

மத்திய காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறியபோதும் அவை காசாவின் 53% பிரதேசத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து உள்ளன; அவை காசாவில் எஞ்சிய வீடுகளையும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் தீ வைத்துக் கொளுத்தின. சிதைக்கப்பட்டுவிட்ட தங்களது வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் காசா மக்களுக்கு இப்போது குடிநீர் கிடைப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 90% குடியிருப்புகள் இஸ்ரேலியப் படைகளால் தரைமட்டமாக்கப்பட்டு விட்டதால் காசா மக்கள் இப்போதும் முகாம்களிலேயே வாழவேண்டிய நிலையில் உள்ளனர். மருத்துவமனைகள் மிக மோசமாக அழிக்கப்பட்டு விட்டதாலும் சிகிச்சைக்கு மிக அவசியமான தேவையான மருந்துகளும் வேறு உபகரணங்களும் பெற முடியாததாலும் நோய்வாய்ப்பட்டவர்களும் காயம் அடைந்தவர்களும் தேவையான மருத்துவ உதவி பெற முடியாது. உணவு, தண்ணீர் மற்றும் மருந்து ஆகியவை மக்களுக்கு நீண்ட காலத்திற்குக் கிடைக்காது. உண்மையில் , உயிர் வாழும் காசா மக்கள் அனைவரும் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளார்கள், நோய்வாய்ப்பட்டும் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் சிதைந்த நிலையிலும் உள்ளார்கள் ; அவர்களது வாழ்க்கையைச் சீரமைக்கத் தேவையான எதுவுமே கிடைக்காத...

செப்டம்பர் 18 - ஃபிரான்சில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் – அடுத்து என்ன?

  18.09.2025 அன்று ஃபிரான்சில் நடைபெற்ற தொழிலாளர்கள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்களின் பேரணியானது மிகப் பிரம்மாண்டமானதாக இருந்தது. அது பத்து இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கு கொண்ட பேரணியாகும் ; மேலும் அது ஏராளமான முற்றுகைகளையும் போக்குவரத்து துறை , கல்வி மற்றும் பிற பொது துறைகளின் வேலை நிறுத்தங்களையும் உள்ளடக்கி இருந்தது. உள்துறை அமைச்சர் புரூனோ ரெடைல்லு முன்னறிவித்ததைப் போல அது கலகக்கார்களின் கூட்டமாக இல்லை.   ‌ஃபிரெஞ்சு அரசாங்கத்தால் 2023-- ஆம் வருடம் ஓய்வூதியத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டவர்களின் எண்ணிக்கையை விட 1 8 ந் தேதி நடந்த போராட்டங்களில் பங்குகொண்டவர்களின் எண்ணிக்கை சிறிது குறைந்து இருந்து. ஆனால் அப்போது ' பல நாட்களாகத் திட்டமிட்டு எடுத்த நடவடிக்கைகள் ' முப்பது இலட்சதிற்கும் அதிகமான போராட்டக்காரர்களால் நடத்தப்பட்ட மிகப்பெரும் போராட்டமாக அது அமைந்தது.     ஆனால் 2023- இல் நடந்த போராட்டம் அதன் உச்சத்தை அடைய பல நாட்களை எடுத்துக் கொண்டது. இன்னொரு பக்கம், மிக முக்கியமாக, 18.09. 2025 அன்று நடந்த பேர...

டிசிஎஸ் தொழிலாளர்கள் பணி நீக்கமும், தொழிலாளி வர்க்கத்தின் முன் உள்ள கடமையும்!

  டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் (டிசிஎஸ்) 12000 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யபடும் அபாயம் இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவந்த நிலையில் முதலில் அதனை மறுத்த நிறுவனம், பின்னர் ஒத்துக்கொண்டது. ஆனால், மொத்தமுள்ள 6 இலட்சத்து 13 ஆயிரம் தொழிலாளர்களில் இந்த ஆண்டு மட்டும் 30 ஆயிரம் தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்ற இருப்பதாக டிசிஎஸ் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச அளவில், ஐடி துறையில் மிகக் குறைந்த கூலியில் பணியாற்றக் கூடியவர்களாக இந்தியத் தொழிலாளி வர்க்கம் உள்ளது. வளர்ந்த நாடுகளில் தொழிலாளர்களின் ஊதியம் அதிகளவில் இருப்பதால், பின் தங்கிய நாடுகளில் இருந்து உழைப்புச் சக்தியை இறக்குமதி செய்வது அல்லது மூலதனத்தை ஏற்றுமதி செய்வது அல்லது அயல் பணி ஒப்படைப்பு முறையில் வேலைகளை ஒப்படைப்பது என்று முதலாளிகள் குறைவான கூலியில் வேலை செய்யக் கூடிய திறன் பெற்ற தொழிலாளர்களைச் சுரண்டுகின்றனர். அந்த வகையில் இந்திய முதலாளி வர்க்கமானது, இந்தியச் சந்தை மற்றும் சர்வதேசச் சந்தைகளுக்கான தகவல் தொழில் நுட்பச் சேவையை குறைந்த கூலியில் வழங்கக்கூடிய திறன் பெற்ற தொழிலாளி வர்க்கத்தை தன்னக...