அக்டோபர் ஏழாம் தேதி காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது திடீர் தாக்குதலைத் தொடுத்தனர் . இந்தத் தாக்குதலை இஸ்ரேல் சிறிதும் எதிர்பார்க்கவில்லை . அதனுடைய புகழ்பெற்ற உளவு ஸ்தாபனமான மொசாத்தும் கூட அதை முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை . தொடர்ந்து நடந்த ஆயிரக்கணக்கான ராக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேல் மக்கள் 1400 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன . இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கடுமையான கண்டனத்தை வெளியிட்டன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உடனடியாக இஸ்ரேலுக்கு வந்து அமெரிக்காவின் முழுமையான ஆதரவு இஸ்ரேல் மக்களுக்கு உண்டு என்று கூறி தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்காவின் போர்க் கப்பல்களை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பியுள்ளார் . இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக்கும் தனது ஆதரவைத் தெரிவிக்க இஸ்ரேலுக்கு நேரடியாகச் சென்றுள்ளார் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்த அமைப்பினரைப் பூண்டோடு ஒழிப்போம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு சபதம் ஏற்று காசா பகுதி மீது கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துள்ளார் . கடந்த 14 நாட்களாக நட
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்