வங்கதேசத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன்படி 2023 ல் குறைந்தபட்ச ஊதிய உயர்விற்கான பேச்சு வார்த்தை அரசு, ஆயத்த ஆடை முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர்களுக்கு இடையே நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மாத ஊதியமாகத் தற்போது பெற்றுவரும் 72 டாலருக்குப் பதிலாக (அதாவது வங்கதேச ரூபாய் மதிப்பிலான 8300 டாக்காவிலிருந்து) 203 டாலராக (அதாவது 23000 டாக்காவாக) உயர்த்தித் தரவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர். இதை நிராகரித்த தொழிற்துறை முதலாளிகள் குறைந்தபட்ச ஊதியமாக 113 டாலர் (அதாவது 12500 டாக்காவாக) மட்டுமே உயர்த்தித் தரமுடியும் எனத் தெரிவித்துள்ளனர். முதலாளிகளின் தர முன்வந்த குறந்தபட்ச ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து தலைநகரான டாக்கா மற்றும் தொழில்துறை மாவட்டமான காசிப்பூரில் அரசு மற்றும் ஆயத்த ஆடை முதலாளிகளுக்கு எதிராக வீரியமிக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். போலிசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். போராட்டத்தில
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்