Skip to main content

Posts

Showing posts from April, 2023

புதிய சட்டத் தொகுப்புகளுக்கான விதிமுறைகளில் 12 மணிநேர வேலைநாள் விதிமுறையை கைவிடுக!

தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023இல் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட 12 மணிநேர வேலைநாள் சட்டத்திருத்ததை தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பின்னர், தமிழக அரசு இந்தச் சட்டத்தின் மீதான மேல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தமிழக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.  எனினும், இந்த சட்டத்திருத்ததை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவிக்கவில்லை, அடுத்த கட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக மட்டுமே அறிவித்துள்ளது. மீண்டும்  இதன் மீதான மேல் நடவடிக்கைகள் எப்பொழுது வேண்டுமானாலும் முன்னெடுக்கப்படலாம். எனவே இந்த சட்டத்திருத்ததை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். இது மட்டுமல்லாமல், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான தமிழக அரசின் விதிமுறைகளில் வேலைநாளை எட்டு மணி நேரம் என்பதற்கு பதிலாக 12 மணி நேரம் என வரையறை செய்துள்ளது.  இந்திய அரசு தொழிலை இலகுவாக நடத்துதல் என்ற பெயரில் முதலாளி வர்க்கத்தின் சுரண்டல் நலனை பாதுகாக்கும் வண்ணம், தொழிலாளர்களின் உரிமைகளை

எட்டுமணி நேர வேலை பறிப்பு: பாஜகவும், திமுகவும் ஆளும் முதலாளிய வர்க்கத்தின் சேவகர்களே!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தொழிற்சாலைகள் சட்டம் - 1948 க்கான தமிழ்நாடு தொழிற்சாலைகள் விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வரைவு ஒன்று தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய சட்ட முன்வரைவு  ஒரு நாளின் வேலைநேரம் என்பது 8 மணி நேரம் என்பதை 12 மணி நேரமாக அதிகரித்துக் கொள்ள குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு அல்லது தொழிற்பிரிவுகளுக்கு அனுமதியளிப்பதற்கான திருத்தங்களைக் கொண்டுள்ளது. இந்தத் திருத்த சட்ட முன்வரைவு  தாக்கல் செய்யப்பட்ட பின்பு சிபிஐ, சிபிஎம் ஆகிய இடதுசாரிகள் மட்டுமே தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துப் போராட்டங்களை முன்னெடுத்தன. மற்ற முதலாளித்துவ கட்சிகள் எவையும் இதனைப் பெரியதாகப் பொருட்படுத்தவில்லை. இந்த நிலையில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்தச் சட்ட முன்வரைவு மீது எந்த விவாதமும் நடத்தாமல், குரல் வாக்கெடுப்பின் மூலம் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. தேர்தல் கட்சிகளில் இடதுசாரிகள் தவிர மற்ற கட்சிகள் தங்கள் ஜனநாயகக் கடமைகளை வெளிநட

முதலாளிகளின் நாடும் உழைக்கும் மக்களும்

தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, ஏப்ரல் 6ந் தேதி கிண்டி ராஜ்பவனில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப் பணித் தேர்வுகளுக்காகத் தயாராகும் மாணவர்களுக்கு எடுத்த வகுப்பில் தான் ஒரு முதலாளிய வர்க்கத்தின் அடிவருடி என்றும், முதலாளிய வர்க்கம் வீசி எறியும் எலும்புத் துண்டுக்காக நன்றியுடன் பணியாற்றும் அதிகாரவர்க்கத்தின் ஒரு பிரதிநிதி என்பதையும் அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.  ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், கூடங்குள அணு உலைக்கு எதிராகவும் மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களை அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு நடந்த போராட்டங்கள் எனக் கூறிக் கொச்சைப்படுத்தியுள்ளார். அவை நாட்டின் நலன்களுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் என்று கூறி, அந்தப் போராட்டங்களை நடத்திய மக்கள் நாட்டின் நலன்களுக்கு எதிரானவர்கள் எனக் கேவலப்படுத்தியுள்ளார். அதன் மூலம் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொண்டு போராடிய மக்கள் மீது மிருகத்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி பதினைந்து இன்னுயிர்களைக் குடித்த, முதலாளிகளின் பாதுகாவலர்களான போலீஸ் ரவுடிகளை நாட்டு நலன்களைக் காப்பாற்றியவர்களாக அர்த்தப்படுத்து