Skip to main content

Posts

Showing posts from January, 2024

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

ஆறு மாதங்களில் 852 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய செல்வத்தைக் குவித்த உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள்!

  அண்மையில் வெளியிடப்பட்ட - ப்ளூம்பெர்க் நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட ஆய்வு தரவுகளின்படி, உலகின் மிகப் பெரிய   பணக்காரர்கள் 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும்  852  பில்லியன்(1 பில்லியன் = 100 கோடி)   டாலர்கள் மதிப்பிற்கு சொத்துக்களைப் பெருக்கியுள்ளனர். உலகின் 47% சதவிகித மக்கள் ஒரு நாளுக்கு வெறும் 6.25 டாலர்களில் வாழப் போராடிக் கொண்டிருக்கும்போது, ப்ளூம்பெர்க் கோடிசுவரர்கள்   பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு நாளில் சராசரியாக  14 மில்லியன் (1மில்லியன் = பத்து இலட்சம்) அமெரிக்க டாலர்கள் என்னும் அளவில் 6 மாதங்களில் அடைந்துள்ளனர்.        உலகின் 2640 பில்லியனர்களின் [மிகப் பெரிய   கோடீஸ்வரர்கள்] சொத்துகள் 2020- ஆம் ஆண்டின்   இறுதிப் பாதி காலகட்டத்திலிருந்து கணிக்கப்படும்போது  2023- இன் முதல் பாதியில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளன. இதற்கு முந்தைய அதிகரிப்பு, உலக மக்கள் அனைவரையும்   மிகக் கொடுமையாக   பாதித்த கோவிட் பெருந்தொற்றின் போது , இந்தப் பெரும்பணக்காரர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க டிரில்லியன் (1 டிரில்லியன் =ஒரு இலட்சம் கோடி) கணக்கான அமெரிக்க டாலர்களை அமெரிக்க