தொழிற்சாலைகள் பல நேரங்களில் தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் கூடங்களாக மாறி வருவது தொடர்கதையாகி வருகிறது . அந்த வரிசையில் , திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நடந்துள்ள அம்மோனியா வாயு கசிவு விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது . இலாபத்திற்காக தொழிலாளர்களைப் பலி கொடுக்கும் கார்ப்பரேட் ஆதிக்கத்தின் கொடூர முகத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் உள்ள கன்னிகைபேர் என்ற கிராமத்தில் , கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் செயிண்ட் பீட்டர் & பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் ('St. Peter & Paul Sea Foods Exports ) என்ற ஆலை இயங்கி வருகிறது . கடல் சார்ந்த மீன் , இறால் போன்ற உணவுகளைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த ஆலையின் வருவாய் ஆண்டிற்கு 250 கோடி ரூபாய் அளவில் உள்ளது . தமிழகத்தில் திருவள்ளூர் மட்டுமல்லாது , கடலூர் , ராமநாதபுரம் , காஞ்சிபுரம் , சென்னை , நாகப்பட்டினம் , தூத்துக்குடி , கன்னியாகுமரி , புதுக்கோட்டை போன்ற கடலோர மற்றும...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்