Skip to main content

Posts

Showing posts from August, 2026

வீட்டு வேலை செய்வோரும், பெண்களின் உழைப்பும் நீதிமன்றங்களின் மொழியும்!

  வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான சேமநல நடவடிக்கைகள் கோரி பெண் தொழிலாளர்கள் சங்கமும் பிற அமைப்புக்களும் தொடுத்த பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூரியகாந்த் , நீதிபதி ஜோய்மால்யா ஆகியோர் அடங்கிய அமர்வின் பார்வை அறிவியல்பூர்வமாக இல்லை , அத்தோடு குறுகிய மனம் கொண்டதாகவும் இருக்கிறது , கிராமத்து நடைமேடைகளில் அமர்ந்திருக்கும் பாமரர்களின் அரட்டைப் பேச்சுகளைப் போன்ற கருத்துரைகளை நாட்டின் மிக உயர்ந்த அரசியல் சாசன நீதிமன்றத்திடமிருந்து கேட்கவேண்டியிருந்தது துரதிர்ஷ்டவசமானது.   தலைமை நீதிபதி குறிப்பிட்டதாவது: “சட்டத்தின் மூலமாக பாகுபாடற்ற ஓர் அமைப்பு முறையைக் கொண்டுவரும் நோக்கில் , பலநேரங்களில் நாம் நம்மை அறியாமலேயே பெரும் சுரண்டலுக்கு இட்டுச் செல்லும் நிலைமைகளை உருவாக்குகிறோம். குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்றால் , மக்கள் வேலைவாய்ப்பை அளிப்பதற்கு தயங்குவார்கள். இது இன்னும் கடினமான நிலைமைக்கு இட்டுச் சென்றுவிடும். இது வேண்டல் – வழங்கல் ( Demand – Supply) பிரச்சனை.” எனக் கூறிய அவர் மேலும் தொழிற்சங்கங்களை இழிவுபடுத்தி நிராகரிக்கும் வகையில் “கொடிச்...

கடல் அலையைக் கரங்களால் தடுத்து நிறுத்த முடியுமா?

  கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைமையில் தில்லி ஜந்தர்மந்தரில் நடந்த நீட் ( NEET) தேர்வுத் தாள் கசிவு மற்றும் பல்வேறு தேர்வு முறை முறைகேடுகளுக்கு எதிரான இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் ஆட்சியாளர்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . ஜூலை 20 ந் தேதி பாராளுமன்றத்தை முற்றுகையிடச் சென்ற இளைஞர்கள் மீதும் மாணவர்கள் மீதும் கொடுரமான அடக்கு முறையை போலீஸ் கட்டவிழ்த்து விட்டது ; ஆணிகள் பதித்த தடிகளாலும் , பெல்லட் குண்டுகளாலும் தாக்கியது ; பெண்கள் மீதும் அநாகரிகமான தாக்குதல்களை நடத்தியது . அதன் மூலம் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என ஆட்சியாளர்கள் நினைத்தனர் . ஆனால் இளைஞர்களும் மாணவர்களும் அடக்குமுறையைக் கண்டு அஞ்சவில்லை . விடாப்பிடியாக , உறுதியுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர் . கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானை பதவி விலக வைத்தனர் .   அண்டை நாடுகளான இலங்கை , நோபாளம் , வங்காளதேசம் ஆகியவற்றில் நடந்த இளைஞர்களின் போராட்டங்கள் அந்த நாடுகளில் ஆட்சியாளர்களை விரட்டி அடித்தன . அதைப் போல இங...