பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலப்புச் செய்து E20 பெட்ரோலாக விற்பதன் மூலம் நாம் இப்பொழுது எரிபொருளுக்காக அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதற்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணி குறையும் என்றும், எத்தனால் தயாரிப்பதற்காக கரும்பு, மக்காச் சோளம் ஆகியவற்றை விவசாயிகளிடமிருந்து வாங்குவதால் விவசாயிகள் அதிக இலாபம் பெறுவார்கள் என்றும், மேலும் E20 பெட்ரோலைப் பயன்படுத்துவதால் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியிடப்படுவது குறையும் என்பதால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும் என்றும் ஒன்றிய அரசாங்கம் கூறி வருகிறது. அரசாங்கம் அறிவித்துள்ள இலாபம் உண்மையில் விவசாயிகளுக்குக் கிடைக்குமா? இதனால் அதிகம் பயனடைபவர்கள் யார்? இதன் பின் விளைவாக மக்களின் உணவுப் பாதுகாப்பு எவ்வாறு பாதிக்கப்படும்? என்பது பற்றிப் பார்ப்போம். மக்காச் சோளத்தின் நிலப் பரப்பு அதிகரிப்பு பெட்ரோலுக்கான எத்தனால் தயாரிப்பதற்கு முதலில் கரும்பு பயன்படுத்தப்பட்ட போதிலும் இப்போது மக்காச்சோளமே மிகப்பெரிய முக்கியமான ஆதாரமாக உள்ளது . 2022 --23 முதல் 2025-- 26 வரையிலான காலகட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடப்படும் நிலப் ப...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்