ரசியாவில்
ஜார் மன்னனைத் தூக்கி எறிந்த 1917
பிப்ரவரி முதலாளியப் புரட்சிக்குப்
பிறகு லெனின் தனது புகழ் பெற்ற ஏப்ரல் ஆய்வுரையில் பின்வருமாறு
குறிப்பிட்டார்:
”ரசியாவில் இப்போதுள்ள
சூழ்நிலையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த நாடு புரட்சியின் முதல்
கட்டத்திலிருந்து இரண்டாவது கட்டத்துக்குச் சென்று
கொண்டிருக்கிறது என்பதாகும்.
முதல் கட்டம், பாட்டாளி வர்க்கத்துக்குப் போதுமான வர்க்க உணர்வும் அமைப்பும்
இல்லாமையினால் முதலாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தை வழங்கியது. இரண்டாவது
கட்டம், பாட்டாளி வர்க்கத்தின் கையிலும் உழவர் வர்க்கத்தின் மிகவும் வறிய
பிரிவினரின் கையிலும் அதிகாரத்தை
வழங்க வேண்டும்.”
(லெனின்
தொகுப்பு நூல்.24 பக்.22 )
ஓராண்டுக்குப் பிறகு நவம்பர்
புரட்சியைத் திரும்பிப் பார்த்த லெனின் பின்வருமாறு எழுதினார்:
“நமது
கருத்தின் சரியான தன்மையை புரட்சி மேற்கொண்ட பாதை உறுதி செய்திருக்கிறது.
முதலாவது, ’அனைத்து’ உழவர்களையும் ஒருங்கிணைத்து முடியரசுக்கும்
நிலவுடைமையாளர்களுக்கும் மத்தியகாலத்தன்மைக்கும் எதிராக நடத்திய போராட்டம்; இந்த
அளவுக்கு முதலாளிய வர்க்க ஜனநாயகப் போக்குடையதாக புரட்சி அமைந்திருந்தது. பிறகு
கிராமப் பணக்காரர்கள், குலாக்குகள், கொள்ளை இலாபக்காரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய
முதலாளியத்துக்கு எதிராக ஏழை உழவர்கள், அரைப் பாட்டாளிகள் மற்றும் சுரண்டப்பட்ட
அனைவரையும் ஒன்றிணைத்து நடத்திய போராட்டம்; இந்த அளவுக்கு புரட்சி ஒரு சோசலிசப்
போக்குடையதாக அமைகிறது. முதல் கட்டத்துக்கும் இரண்டாவது கட்டத்துக்கும் இடையில்
ஒரு செயற்கையான சீனச் சுவரை எழுப்ப முயல்வதும் பாட்டாளி வர்க்கத்தின் ஆயத்த
நிலைமை, பாட்டாளி வர்க்கம் ஏழை உழவர்களோடு
கொண்டிருந்த ஐக்கியத்தின் அளவு என்பதை விடுத்து வேறு எதனைக் கொண்டும்
இவ்விரண்டையும் பிரித்துப் பார்க்க முயல்வதும் மார்க்சியத்தை அபாயகரமான வழியில்
சிதைப்பதாகும்; அதைக் கொச்சைப்படுத்துவதாகும்; அதற்குப் பதிலாக மிதவாதத்தைக்
கொண்டு வருவதாகும்.
-(லெனின்,தொகுப்பு நூல்..28,பக்.300)
Comments
Post a Comment