இந்தியாவில் உள்ள முதலாளிய ஜனநாயகத்தில் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை. பேச்சுரிமை , எழுத்துரிமை , கூட்டம் கூடும் உரிமை எனப் பல உரிமைகள் அடிப்படை உரிமைகளாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் பேச்சுரிமை , எழுத்துரிமை , கூட்டம் கூடும் உரிமை போன்றவை எல்லாம் ஏட்டளவிலேயே உள்ளன ; அவை நடைமுறையில் அதிகார வர்க்கத்தின் தயவிலேயே உள்ளன. இவற்றில் வாக்களிக்கும் உரிமை மட்டும் இது நாள் வரையிலும் கட்டுப்படுத்தப்படாமலும் பறிக்கப்படாமலும் இருந்து வந்தது. இன்று அந்த உரிமையும் ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டுள்ளது. சிறப்புத் தீவிரத் திருத்தம் ( Special Intensive Revision) என்ற பெயரில் நாடு முழுவதும் 13 கோடி மக்களின் வாக்குரிமையை இந்தியத் தேர்தல் ஆணையம் பறித்துள்ளது. ஆளும் கட்சியான பாஜக வின் விசுவாசமான ஏஜண்டாக இருந்து , மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் முக்கியமான ஒன்றான வாக்குரிமையைப் பறித்து ஜனநாயக விரோதியாக , மக்கள் விரோதியாக , தேசத் துரோகியாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு , கையும் களவுமாகப் பிடிபட்டு நிற்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் . இந்த மக்கள் வ...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்